சூப்பர்... குகேஷ், மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது..!

இன்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், 4 பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது, 32 பேருக்கு அர்ஜுனா விருது, பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
Hon'ble President Smt. Droupadi Murmu confers the National Sports and Adventure Awards 2024 at Rashtrapati Bhavan, New Delhi.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 17, 2025
https://t.co/sDnidCK6Is
கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் கோட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 2023ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், கடந்த 2021 மற்றும் 2024 ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் ஹர்மன்பிரீத் சிங், உயரம் தாண்டுதலில் பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் இருந்து மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
இதேபோல், ஹாக்கி, செஸ், குத்துச் சண்டை, துப்பாக்சிச்சூடு உட்பட பல்வேறு வகையான விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நீது, ஸ்வீட்டி, வங்கிட அகர்வால், அபிஷேக், சஞ்சய், ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், ராகேஷ் குமார் உட்பட 32 பேர் அர்ஜுனா விருது பெற்றனர். இதற்கு முன் இல்லாத வகையில் 17 பேர் பாரா-தடகள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது சுச்சா சிங், முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் இருவருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது சுபாஷ் ராணா, தீபாலி தேஷ்பாண்டே, சந்தீப் சங்க்வான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பயிற்சியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முரளிதரன், அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் விருது இந்திய உடற்கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வழங்கப்படும் செயல்திறன்களுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் புள்ளிகள் முறை மூலம் வருடாந்திர விருதுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. கேல் ரத்னா விருது பெற்றவர்களுக்கு ரூ25லட்சம் ரொக்கப்பரிசு, பதக்கம் மற்றும் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அர்ஜுனா விருது பெறுபவர்களுக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி, பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!