வானியல் ஆர்வலர்களுக்கு விருந்து: அடுத்தடுத்து 4 முறை தோன்றும் 'சூப்பர் மூன்' - முழு விவரம் இதோ!
Nov 23, 2026, 16:06 IST
பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது வழக்கமான பௌர்ணமி நாட்களை விட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசமாகவும் காட்சியளிக்கும் 'சூப்பர் மூன்' நிகழ்வுகள் அடுத்தடுத்து 4 முறை நடைபெற உள்ளன.
நவம்பர் 24-ஆம் தேதி தோன்றவுள்ள 'பீவர் மூன்' நிகழ்வைத் தொடர்ந்து, டிசம்பர் 23, ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளிலும் முழுநிலவு மிகப் பிரகாசமாகத் தோன்றவுள்ளது.
இந்த அரிய வானியல் நிகழ்வின்போது நிலவு வழக்கத்தை விட மிகவும் அழகாகவும், தெளிவாகவும் காட்சியளிக்கும். இதனால் வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே இந்த நிகழ்வுகளைக் காணப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
