இன்று இரவு சூப்பர் மூன்!! ஆண்டின் 2வது பெரிய மூன்!!

 
பௌர்ணமி

இன்று ஆடி பௌர்ணமி . முழு நிலவு நாள். இந்த ஆண்டின் 2வது சூப்பர் மூன் இன்று இரவு ஆகஸ்ட் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை தெரியும். இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை பெளர்ணமி வருகிறது. இன்று ஆகஸ்ட் 1ம் தேதி ஒரு பௌர்ணமியும், ஆகஸ்ட் 30ம் தேதி  2வது பௌர்ணமியும் வர இருக்கிறது. இதே போல் மீண்டுமொரு நிகழ்வு 2037ல் தான் தெரியவரும்  என சொல்லப்படுகிறது.இன்று இரவு தெரியும்  சூப்பர் மூன் ஸ்டர்ஜன் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. இது மற்ற சூப்பர் மூன்களை விட மிகப் பெரியது.  ஏனெனில் அது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இது தவிர, அதன் நிறத்தை நீங்கள் எளிதாகப் பார்க்கலாம். இந்த நாளில் பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை சுமார் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதாக   விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சித்ரா பௌர்ணமி
 
 பூமி எப்படி சூரியனைச் சுற்றுகிறதோ.. அதேபோலத் தான் நிலவும் நமது பூமியைச் சுற்றி வருகிறது. இது அனைவருக்குமே  தெரியும்.. அப்படிச் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது இன்று முழு நிலவு வானத்தில் தெரிகிறது.  'ஸ்டர்ஜன் மூன்' என்ற பெயர் முதலில்  வட அமெரிக்காவில் தான் உருவானது.  அங்கு பழங்குடியினர் மற்றும் ஆரம்பகால குடியேற்றவாசிகள் கடந்து செல்லும் ஒவ்வொரு பருவங்களையும்  கண்காணிக்கவும் முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கவும் ஒவ்வொரு முழு நிலவுக்கும் வெவ்வேறு பெயர்களைப் வைத்தனர். .

பௌர்ணமி

ஆகஸ்ட் முழு நிலவு வட அமெரிக்காவின் பெரிய ஏரிகளில் ஸ்டர்ஜன் மீன்கள் இந்த நேரத்தில் அதிகமாக காணப்பட்டது.     இந்த ஆகஸ்ட் முழு நிலவு ஸ்டர்ஜன் நிலவு   பல்வேறு இடங்களில் பல்வேறு மாற்றுப் பெயர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பெயர்களில் 'தானிய நிலவு' பயிர்களை அறுவடை செய்வதற்கான நேரத்தைக் குறிக்கிறது; 'சோள நிலவு,' சோளம் பழுக்கக் குறிக்கிறது; மற்றும் 'மின்னல் நிலவு', இந்த காலகட்டத்தில் அடிக்கடி ஏற்படும் இடியுடன் கூடிய மழையை குறிக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web