குட் நியூஸ்! 3வது அலையில் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க புதிய வழிமுறைகள்!

 
குட் நியூஸ்!  3வது அலையில் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க புதிய வழிமுறைகள்!


இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது 3 வது அலையால் உலக நாடுகள் அனைத்தும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் 3 வது அலையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்!  3வது அலையில் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க புதிய வழிமுறைகள்!


இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் “பெரியவர்களை விட குழந்தைகளுக்கான பாதிப்பின் தன்மை குறைவாகவே உள்ளது. பெற்றோர்கள் தொடர்ந்து , முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி இவற்றை கடைப்பிடித்தால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

குட் நியூஸ்!  3வது அலையில் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க புதிய வழிமுறைகள்!

பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் கொரோனா கிருமி குழந்தைக்கு செல்லாது.
மாறாக, ஒரு நோய்க்கு எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைப்பது அனுகூலமாகும். கொரோனா தொற்றுள்ள தாய், தாய்ப்பால் ஊட்டும்போது முகக்கவசம் அணிதல் வேண்டும். மேலும், தன் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதித்த குழந்தைகள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப் போக்கு போன்றவை இருக்கலாம்.

குட் நியூஸ்!  3வது அலையில் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க புதிய வழிமுறைகள்!


தொற்று ஏற்பட்டால் குழந்தைகள் சோர்ந்து போகாமல், உடலில் நீர்ச்சத்து குறையாமல் அவ்வப்போது அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு மற்றும் சத்துள்ள உணவுகளையும் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு இருப்பின் உப்பு – சர்க்கரை கரைசல் அல்லது ஓஆர்எஸ் கொடுக்கலாம்.
காய்ச்சலுக்கு பாராசிட்டமால் போதுமானது. குழந்தைகளுக்கு தேவையற்ற மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி கொடுப்பது நல்லதல்ல. கொரோனா தவிர்த்து ஆஸ்துமா, சர்க்கரை நோய், இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி அதற்கு தேவையான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பதாலும் குழந்தைகளுக்கு மன உளைச்சல் அல்லது அழுத்தம் போன்றவை ஏற்படலாம். குழந்தைகளுக்கு கூடுமானவரை தொலைக்காட்சி, அலைபேசி, கணினி போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தல் நல்லது.
அவர்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்தால் தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வீட்டுக்குள்ளேயே விளையாடலாம்.கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய பிரத்யேக மருத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளது. இதற்கான பிரத்யேக மருத்துவ ஆலோசனைக் குழுவும் தயார் நிலையில் உள்ளது. அதனால், மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web