11250 காலியிடங்கள்... ரயில்வேயில் டிக்கெட் கலெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே குறைவான கட்டணத்தில் தொலைதூர பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்கிறது. அத்துடன் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அளித்து வருகிறது அந்த வகையில் இந்திய ரயில்வேயில் மிகப்பெரிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட தயாராக உள்ளது. டிக்கெட் கலெக்டர் (டிசி) வேலைகளுக்கான காலியிடங்களை இந்திய ரயில்வே தொடங்க உள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 11,250 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிசி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில காரணங்களால் பணியிடங்களை நிரப்பும் பணி அடுத்த மாதம் செப்டம்பரில் தொடங்கலாம். அறிவிப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrailways.gov.in ஐப் பார்க்கவும்.
ரயில்வே TC பணிகளுக்கு முயற்சிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. வயது வரம்பு குறித்த தகவல்கள் அறிவிப்பில் குறிப்பிடப்படும். இந்தியர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வயது மற்றும் கல்வித் தகுதி உள்ளவர்கள் இந்த ரயில்வே டிசி பதவிகளுக்கு தகுதியானவர்கள்.
இண்டர்மீடியட் அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரயில்வே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கும். ரயில்வேயில் TC பணிகளுக்கான விண்ணப்பதாரர்களின் உடல் தரங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட உயரம் மற்றும் பார்வைக் குறைபாடு இல்லாதது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும்.
இந்தத் தகுதிகள் அனைத்தும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையைப் பெறலாம். வேலையில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.35,000 சம்பளமாக பெறமுடியும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
