நெகிழ்ச்சி... பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர், பொங்கல் நாளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
இந்நிலையில், தனது பள்ளிகால நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். அதில் அவர் 'நான் பார்த்த படங்களை பள்ளியில் என் நண்பர்கள் முன்னிலையில் நடித்து காட்டுவேன்.
இது என் ஆசிரியர்களுக்கு தெரிய வர பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நாடக போட்டியில் நடிக்க வைத்தனர். அப்படி நடிக்கும் போது எனக்கு சிறந்த நடிப்பிற்காக விருது கிடைத்தது. அது இப்போது எனக்கு மிகவும் உதவுகிறது' என தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!