சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ்பி வேலுமணி வீட்டிற்கு திடீர் விசிட்!

அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி. இவரது மகன் விஜய் விகாஷ் திருமணவிழா கடந்த மாதம் 3ம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியில் செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
எங்களது மகன் V.விஜய் விகாஸ் - C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/0V2CB29vgA
— SP Velumani - SayYEStoWomenSafety & AIADMK (@SPVelumanicbe) April 29, 2025
இவ்விழாவில் பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக நிர்வாகிகளும் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டனர். இதில் தவிர்க்கமுடியாத காரணங்களால் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை.
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஷ்- தீக்ஷணா புதுமண தம்பதியினரை நேரில் சென்று வாழ்த்தினார்.எங்களது மகன் V.விஜய் விகாஸ் - C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் எனப் பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!