பட்டாசுக்கு முழு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

 
பட்டாசு

பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அதேவேளையில் 24 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க இயலாது எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

பட்டாசு

பட்டாசுகள் மீது முழுத் தடை விதிப்பது பொதுமக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பண்டிகைக் காலங்களில் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடு மட்டுமே நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த பேரியம் (Barium) கொண்ட பசுமைப் பட்டாசுகள் பயன்பாடு தொடர்பான இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.