6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையிலிருந்து விலக்கு - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
Sep 10, 2026, 07:35 IST
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழி கொள்கையைக் கட்டாயமாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மாணவர்களின் நலன் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இவ வழக்கை விசாரித்தது. அப்போது, இந்த மும்மொழி கொள்கையால் மாணவர்கள் எந்தவிதமான மன அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடாது என்பதை நீதிபதிகள் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.

நடப்புக் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு பயிலும் இளம் மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்க முடியுமா என்பது குறித்து ஆழமாகப் பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இ அமைப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
