முதலமைச்சர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு!

 
முதலமைச்சர் விஜய் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற விசாரணையின் போது தமிழக முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாராபுரத்தில் நடைபெற்ற தவெக வேட்பாளர் ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இதனைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, "உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும், உங்கள் முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்படுகிறார்; அவரைப் பற்றி நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன" என நீதிபதி சஞ்சய் குமார் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மற்றொரு நீதிபதியான சஞ்சீவ் சச்தேவாவும் இதனை ஆமோதித்ததாகக் கூறப்படுகிறது.

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளே முதலமைச்சர் விஜய்யின் ஆளுமை மற்றும் பணிகளைப் பாராட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியாவிலேயே இவரைப் போன்ற திறமையான முதல்வர் இல்லை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.