டிராபிக் அபராதத்தை மின்கட்டணத்துடன் இணைக்க உச்ச நீதிமன்றம் யோசனை!

 
டிராபிக் ஃபைன் அபராதம்

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் இந்த அபராதத் தொகையை வீட்டு மின் கட்டணத்துடன் இணைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என அதிரடி யோசனையை முன்வைத்துள்ளது.

சாலை விதிகளை மீறுவோரிடமிருந்து அபராதத் தொகையை முறையாகவும் முழுமையாகவும் வசூலிப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பைக்குகள் ஹெல்மெட் பறிமுதல் அபராதம்

வாகன அபராதத் தொகையைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேவைப்பட்டால் அந்த அபராதத்தை வீட்டு மின் கட்டணத்துடன் இணைக்கலாம் என்றும், அவ்வாறு செய்தால் மக்கள் அச்சப்பட்டு அதனைச் செலுத்திவிடுவார்கள் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளே அலெர்ட்... எந்தெந்த வகையான விதிமீறலுக்கு  அபராதம்... சென்னை காவல் ஆணையர் அதிரடி  உத்தரவு!

இந்த விவகாரம் தொடர்பாக உரிய முறையில் பரிசீலனை செய்து தங்களது பதிலை அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.