SIR முடிவுகளுக்குத் தடை விதிக்கப்படலாம் - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

 
SIR நீதிமன்றம் எஸ.ஐ.ஆர்

சிறப்பு தீவிர திருத்த முறை தொடர்பான முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்படவில்லை எனில் அவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

sir

நீதிபதிகள் அமர்வு கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் முறையான ஒருமைப்பாடு அல்லது பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்தால், அந்த முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு அவற்றுக்குத் தடையும் விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.