சூரத் கொடூரச் சம்பவம்: 6 பேர் கடத்தல், 4 பேர் கொலை! இன்சூரன்ஸ் மோசடி கோணத்தில் விசாரணை!

 
சூரத்

 

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் கடத்தப்பட்டு, அவர்களில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேனில் சென்ற குடும்பத்தினரைச் சூரத்தின் பார்தோலி பகுதியில் மர்மக் கும்பல் கடத்தியதாகவும், பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கால்வாயில் தள்ளிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

An insurance fraud involving claims of Rs 50 lakh and Rs 10 lakh has emerged as a possible motive in the kidnapping of six members of a Jalgaon family and the murder

கவிதா, அவரது கணவர் நிதேஷ், 9 வயது சிறுமி ஸ்வீட்டி மற்றும் 2 வயது குழந்தை பிரத்மேஷ் ஆகியோரின் சடலங்கள் அடுத்தடுத்த நாட்களில் மீட்கப்பட்டன. கால்வாயில் தள்ளப்பட்ட 13 வயது சிறுவன் நீந்தி உயிர் தப்பி போலீசாருக்குத் தகவல் அளித்த நிலையில், 16 வயது சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

An insurance fraud involving claims of Rs 50 lakh and Rs 10 lakh has emerged as a possible motive in the kidnapping of six members of a Jalgaon family and the murder

சுமார் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் மோசடியை மறைக்க இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் சூரத் மற்றும் ஜல்கான் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மற்ற குற்றவாளிகளை 6 தனிப்படைகள் தேடி வருகின்றன.