இதப்பார்றா!! வாடகை காதலன், காதலிகள்!! சிங்கிள்களுக்கு இனி நோ டென்ஷன்!!

 
பள்ளி காதல்

தொழில்நுட்ப வளர்ச்சியால்  அன்றாட பிரச்சனைகள் பலவற்றிற்கு விதவிதமான தீர்வுகளை சமூக வலைதளங்கள்  நமக்கு அள்ளி வழங்கி வருகின்றன . அந்த வகையில் நூதனமான பிரச்சனைக்கு விநோத தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் காதலன் அல்லது காதலி  இல்லாதவர்கள் அரசின் இந்த இணையதளத்தில்   ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் செலுத்தி வாடகை காதலி அல்லது காதலனை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

காதல்


 இந்த இணையதளத்தில்  காதலன் அல்லது காதலியை தேடுபவர்கள் தங்களுடைய  வயது சம்பளம் என தனிப்பட்டதகவல்களை பதிவிட்டால் அதற்கு தக்கவாறு  வாடகைக்கு காதலன் அல்லது காதலி கிடைக்கும்.  அரசின் இந்த முடிவு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும் என ஜப்பான் நாட்டின் எதிர்க்கட்சிகள்  கண்டனங்கள், கடும் எதிர்ப்புக்களை  தெரிவித்துள்ளன. 

டெடி காதல் லவ் யூ பொம்மை காதலர் தினம்
ஆனால் ஜப்பான் அரசு இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. மேலும் இது குறித்து “ஏராளமான இளம் வயதினர் காதலன் காதலி இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் அவர்கள் மனசோர்வுக்கு உள்ளாகி விடுவதாகவும் அதனை போக்கவே இந்த புதிய முயற்சி ஏற்படுத்தி இருப்பதாகவும்”  ஜப்பான் அரசு விளக்கம் அளித்துள்ளது.இதனால் படிப்பு, வேலை என பல இடங்களுக்கு செல்லும் இளைஞர்கள் ஒரு வித மன சோர்வுக்கு ஆளாகி உள்ளதாகவும், இந்த சோர்வு அவர்களின் கல்வி, வேலை, குடும்ப வாழ்க்கை இவைகளில்  கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. துணை இல்லாமல், தனிமையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.   இதை தவிர்க்கவே இந்த முடிவு என்கின்றது ஜப்பான் அரசு.   அரசின் இந்த முன்னெடுப்பு தவறான முன்னுதாரணம் என்றும் வாடகை இணை என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம் ஆனால் அது அரசுக்கு வேறு வகையான சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web