கணவர் மீது சந்தேகம்... ஆணுறுப்பைக் கடித்துத் துப்பிய மனைவி!
Aug 2, 2026, 11:45 IST
ரஷ்யாவில் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகமடைந்து, அவரது ஆணுறுப்பைக் கடித்துத் துண்டாக்கிய 39 வயதுப் பெண்ணுக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

விசாரணையில், கணவரின் ஆணுறுப்பைக் கடித்துத் துண்டிப்பதற்காகவே அப்பெண் தனது பற்களைக் கத்தியால் செதுக்கிக் கூர்மையாக்கியதாகத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கணவர் மீது அப்பெண் சுமத்திய கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட அப்பெண்ணுக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
