Swiggy ஊழியர்களிடமிருந்து 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ESOPகளை திரும்ப வாங்க உள்ளது !!

 
swiiggy


உணவு விநியோக தளமான Swiggy திங்களன்று, நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் ESOP( தங்கள் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பங்குகளை குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து நிறுவனமே திரும்ப பெருதல் )  களுக்கு எதிராக 50 மில்லியன் டாலர் வரை பணப்புழக்கத்தைப் பெறுவதற்கான விருப்பம் இருப்பதாக அறிவித்தது. Swiggy நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கியிருந்தாலும், Dineout இலிருந்து தகுதியான பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றும் அது கூறியிருக்கிறது.
ஸ்விக்கியின் மனிதவளத் தலைவர் கிரிஷ் மேனன், அறிவிப்புக்குப்பிறகு, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இரண்டு தனித்துவமான பணப்புழக்க நிகழ்வுகள் மூலம் ஊழியர்களுக்கு நிலையான செல்வத்தை உருவாக்க ஸ்விக்கி அதன் ஒரு வகையான ESOP திட்டத்தை அறிவித்திருந்தது.

swiggy

"எங்கள் குழு Swiggyன் மிகவும் மதிப்புமிக்க சொத்து, மேலும் மேக்ரோ பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும், இந்த செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகள் மூலம் Swiggyன் வெற்றி மற்றும் வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் எங்களின் உறுதிப்பாட்டை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று HRன் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
நிறுவனம், ஒவ்வொரு பங்கின் விலையையும் வெளிப்படையாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2018 முதல், உணவு விநியோக தளம் ஒவ்வொரு ஆண்டும் அளவு அதிகரித்து நான்கு முறை ESOP களை திரும்ப வாங்கியுள்ளது. நிறுவனம் 2018 இல் 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற்றது, பின்னர் 2020ல் 9 மில்லியன் டாலர்களை செலவழித்து திரும்ப பெற்றது. சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு, Swiggy 23 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை 2022ல் திரும்பப் பெற்றது, இப்போது 50 மில்லியன் டாலர்களை செலுத்தி திரும்பப்பெறுகிறது.

esop


நிறுவனத்தில் பல முதலீட்டாளர்களால் நிறுவனத்தின் மதிப்பீடு குறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனம் (AMC) Baron Capital நிறுவனத்தின் மதிப்பீட்டை 34 சதவிகிதம் குறைத்துள்ளது. SECக்கு செய்த தாக்கல்களின்படி, ஸ்விக்கியில் அதன் பங்குகளின் நியாயமான மதிப்பை 50.9  டாலர்  என பரோன் கேபிடல் மதிப்பிட்டுள்ளது. பரோன் கேபிடல் ஸ்விக்கியில் சுமார் 0.7 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது, மேலும் அதன் நியாயமான மதிப்பீட்டின்படி, ஃபுட்டெக் யூனிகார்னுக்கான 7.3 பில்லியன் மதிப்பீட்டைக் குறிக்கிறது. அதற்கு முன், இன்வெஸ்கோ கடந்த நான்கு மாதங்களில் ஃபுட்டெக் தளத்தின் மதிப்பீட்டை இரண்டு முறை குறைத்து, அதை 5.5 பில்லியனாகக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது,

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web