தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

 
தவெக அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் H1N1 பன்றிக் காய்ச்சல் பரவல் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் எந்தவிதமான அச்சமும் அடையத் தேவையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு எச்1 என் 1 பன்றிக்காய்ச்சல்

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் அதிகமாகக் காணப்பட்ட இந்தக் காய்ச்சல், நடப்பாண்டில் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் சற்று அதிகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

பன்றிக்காய்ச்சல்

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நிலவரங்களை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.