சுவிட்சர்லாந்து அதிபர் காய் பார்மலின் இந்தியா வருகை - டெல்லியில் உற்சாக வரவேற்பு!
சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் காய் பார்மல் (Guy Parmelin) 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்குத் தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள சுவிஸ் அதிபர் காய் பார்மல், டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகள் குறித்து அவர் தீவிரமாக ஆலோசிக்க உள்ளார்.
முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுவிஸ் அதிபரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
