புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்!! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

 
புற்றுநோய்

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் இன்று உலகம் முழுக்கவே அதிக அளவில் பரவத் தொடங்கிவிட்டது. இதற்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும்  அனைவரின் வாழ்க்கை தரத்திலும் ஒரு பயத்தை உருவாக்கிவிட்டது. புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்பது மருத்துவர்கள் கூற்று. அதே நேரத்தில் அதை ஆரம்பநிலையில் கண்டறிவது அத்தனை சுலபமில்லை என்பதும் தான் உண்மை.  

புற்றுநோய்

தலை மற்றும் கால் வரை உண்டாகும் புற்றுநோய்களையும், அதன் அறிகுறிகளையும் இந்த பதிவில் காணலாம்.  பொதுவாக   வாய், கழுத்து, தொண்டை அல்லது முகம். இதனுடன் தாடை, நாக்கு, குரல்வளை, உமிழ்நீர் சுரப்பிகள், மூக்கு மற்றும் சைனஸ் பகுதிகளிலும்  சாதாரணமாக புற்றுநோய் உருவாகிறது. அதாவது   தலை மற்றும் கழுத்தை சுற்றி 30 இடங்களில் பரவும் அபாயம் உண்டு.  


இந்த இடங்களை பொறுத்தவரை  பெரும்பாலானோருக்கு   பொதுவாக பரவக்கூடியது வாய் புற்றுநோய். இது 90% கழுத்து மற்றும் தலை வரை பாதித்து விடும் தன்மை உடையது.   உமிழ்நீர் சுரப்பியில் உருவாகும் புற்றுநோய்  கழுத்து மற்றும் தலையை சுற்றி அதிகமாக பாதிக்கிறது.   மற்ற பொதுவான நோய்க்குறிகளுடன் தொடர்புடையது என்பதால் எளிதில் கண்டறிய முடியாது. கழுத்து மற்றும் வாயில் வலி அல்லது வீக்கமாக இருந்தால்தொடர்ந்து இந்த வலி   8 வாரங்களுக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக நல்லது.

புற்றுநோய்

 சிலருக்கு  வாயில் வெள்ளை திட்டுக்கள், புண் ,  உணவுகளை விழுங்க சிரமம், குரல் மாற்றம் என ஆரம்பநிலை அறிகுறிகள்.    வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் வர முக்கிய காரணம் புகைப்பிடித்தல், மது, குட்கா, பான் மசாலா இவைகளை பயன்படுத்துதல்   கழுத்தில் வீக்கம் , திடீரென உணவுகளை விழுங்குவதில் சிரமம், வலி , குரலில் மாற்றம் இருப்பின் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.  அடிக்கடி பல் மருத்துவரை சந்தித்து   பொதுவான  பரிசோதனைகளை செய்துகொண்டாலே இதை  ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web