தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்... இந்திய அணி அறிவிப்பு - 2 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
ஏப்ரல் 17ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரில், ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் ஜொலித்த இரண்டு புதுமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் காஷ்வி கவுதம் மற்றும் ஆல்-ரவுண்டர் அனுஷ்கா சர்மா ஆகியோர் முதல்முறையாக இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் இவர்களது சிறப்பான செயல்பாடு, இந்திய அணியின் கதவைத் தட்டியுள்ளது.
வழக்கம் போல் அதிரடி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுவார். அணியில் ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். காயத்திலிருந்து மீண்டுள்ள சில வீராங்கனைகளும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ஸ்ரேயங்கா பட்டீல், காஷ்வி கவுதம், பாரதி புல்மாலி, உமா சேத்ரி, அனுஷ்கா சர்மா.
போட்டி அட்டவணை:
-
ஏப்ரல் 17: முதல் டி20 - டர்பன்.
-
ஏப்ரல் 19: இரண்டாவது டி20 - டர்பன்.
-
ஏப்ரல் 22: மூன்றாவது டி20 - ஜொஹன்னஸ்பர்க்.
-
ஏப்ரல் 25: நான்காவது டி20 - ஜொஹன்னஸ்பர்க்.
-
ஏப்ரல் 27: ஐந்தாவது டி20 - பெனோனி.
-
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்குத் தயாராகும் விதமாக இந்தத் தொடர் அமையும் என்பதால், இந்திய அணிக்கு இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
