அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எப்-16வி போர் விமானங்களை வாங்கியது தைவான் - வான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

 
அமெரிக்கா எப்-16வி போர் விமானம் தைவான்

சீனாவின் தொடர்ச்சியான ராணுவ அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், தைவானுக்கு அதிநவீன எப்-16வி போர் விமானங்கள் வந்து சேர்ந்துள்ளன.

அமெரிக்காவிடம் இருந்து தைவான் பாதுகாப்புத் தேவைகளுக்காக சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பில் அதிநவீன போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அமெரிக்க போர் விமானம்

அந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமாகத் தற்போது அதிநவீன எப்-16வி போர் விமானங்கள் தைவானை வந்தடைந்துள்ளன. இவை தைதுங் வான்படைத் தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.

புதிதாக வந்து சேர்ந்துள்ள இந்த அதிநவீன போர் விமானங்கள், நாட்டின் வான் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தைவானின் ஒட்டுமொத்த தற்காப்புத் திறனை மேலும் வலுப்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெலிங்டன் தெரிவித்துள்ளார். சீனாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.