ஜப்பானிய கோயிலில் புத்தர் பாதத்தில் திரவத்தை ஊற்றிய தைவான் நடிகை கைது!

 
ஜப்பான்

 

ஜப்பானின் முக்கிய தேசிய பொக்கிஷமாகக் கருதப்படும் கோயிலில், தைவான் நடிகையும் தொகுப்பாளருமான டிசாய் ஜென், யாரும் பார்க்காத நேரத்தில் புத்தர் பாதத்தின் மீது கிளிசரின் திரவத்தை ஊற்றிவிட்டுத் தப்பியோடினார். கோயில் நிர்வாகத்தின் புகாரை அடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அவரை கான்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலின் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது ஜப்பான் நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Our Times actress Tsai Yi-chen arrested in Japan for allegedly pouring oil on temple monument - CNA Lifestyle

கைது செய்யப்பட்ட நடிகையிடம் காவல்துறையினர் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சதிச் செயலுக்கான உண்மையான காரணம் குறித்தும் வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.