1000 வருஷத்துக்கு முன்னாடியே தமிழகத்தில் தாஜ்மஹால்.... ராஜேந்திர சோழன் காதலிக்காக கட்டிய கோவில்!

 
திருவாரூர்

1000 வருஷத்துக்கு முன்னாடியே தமிழகத்தில் காதல் நினைவு சின்னம் செதுக்கப்பட்டுள்ளது தெரியுமா? எந்த மாவட்டத்தில் என தெரிஞ்சுக்கலாம் வாங்க. காதலர் தினத்தில் சிறந்த காதலர்களின் வரிசையிலும் காதல் சின்னமாகவும் இன்றளவும் தாஜ்மஹால் தான் போற்றி கொண்டாடப்படுகிறது. தாஜ்மஹாலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது.  சோழர்களின் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன்.

இவர் கங்கை வரை சென்று வெற்றி கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் நகரையும், கோவிலையும் நிர்மாணித்தான். தந்தையின் புகழைக் காட்டிலும் தமக்கு வேண்டாம் என்று எண்ணியே அதனை சிறிதாக கட்டியதாக இன்றுவரை பேசப்படுகிறது. அந்த ராஜேந்திர சோழன்  தனது   காதலி  பரவை நங்கைக்காக  திருவாரூரில் கட்டிய கோவில் தான்  காதல் சின்னம்.    

ராஜேந்திர சோழன், கி.பி. 1012ம் ஆண்டு முதல் 1044ம் ஆண்டு வரை மன்னராக இருந்தவர். இவர்  கடாரத்தை வென்றவர். இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த ஆடல் அழகிக்கும் தாங்கொணா காதால் இருந்தது பலரும் அறியாதது.  சோழ சாம்ராஜ்யத்தை கடல் கடந்து பரவிடச் செய்த மிகப்பெரிய மாவீரன் ராஜேந்திர சோழனின் காதலி தான் பரவை நங்கையார்.  

 "முதலாம் ராஜேந்திரன் கங்கையையும் கடாரத்தையும் வென்று   பல வெற்றிகளை ருசித்தவன். இவனது  உள்ளத்தை  கொள்ளை கொண்ட காதலி   திருவாரூரை சேர்ந்த ஆடல் அழகி பரவை நங்கை.  இவருக்கு கிடைத்த சிறப்பு ராஜேந்திர சோழனின் பட்டத்தரசிக்கு கூட கிடைக்கவில்லை என்கின்றன வரலாற்று சான்றுகள்.  

"ராஜேந்திர சோழனிடம் அவனது காதலி   பரவை நங்கை   வைத்த கோரிக்கைக்காக ஒரு செங்கல் கோவில் கற்கோயிலாக மாற்றப்பட்டது. அந்த கோவில் திருவாரூர் தியாகேசர் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கற்கோயிலாக அமைத்து  கோவிலின் வெளிப்புறம் தொடங்கி கலச பகுதி வரையில் வாயில் உட்புறம் முழுவதும் பொன்னால்  வேய்ந்தான். கருவறை கதவுகளுக்கும், முன்புற தூண்களுக்கும் செம்பினால் தகடு சாத்தப்பட்டது. இந்த கோவில் கட்டிமுடிக்கப்பட்டு நடந்த குடமுழுக்கு விழாவில் ராஜேந்திரன் தன்னுடன் பரவை நங்கையை வீற்றிருக்க செய்து தேரில் ஊரெங்கும் பவனி வந்தான் என்பது வரலாறு.

திருவாரூர்

இருவரும் இறைவனை தரிசித்த இடத்தில் ஒரு குத்துவிளக்கு ஒன்றை நினைவாக ஏற்றினாள். இதனை இவனது கல்வெட்டு 'உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அனுக்கியர் பரவை நங்கையாரும் நிற்குமிடத் தெரியும் குத்து விளக்கொன்றும்' என வரலாற்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.  அத்துடன்  திருவாரூர் கோவிலில் ராஜேந்திர சோழனுடன் பரவை நங்கைக்கு கல்சிற்பம் எடுக்கப்பட்டு தினசரி பூஜை செய்வதற்கு  ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக அளித்தான் என்கிறது திருவாரூர் கல்வெட்டு. 

"தலையில் கிரீட மகுடமும், இடையில் ஆடையும், கழுத்தில் பல அணிகலன்களும் பெற்று ராஜேந்திரன் நின்ற நிலையிலும்,   அருகில் பரவை அழகிய கொண்டையுடனும், பல மடிப்புகளுடன் கூடிய ஆடை அணிந்து இறைவனை   வணங்கியவாறு  சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. “  

திருவாரூர்
இத்தனையும்   ராஜேந்திர சோழன் தனது  காதலி பரவை நங்கை மீது கொண்ட அளவு கடந்த காதலை உறுதி செய்கிறது.  தேவரடியார் பெண் ஒருத்தியிடம் சோழ பேரரசன் கொண்ட காதலால் திருவாரூர் கோவில் கற்கோயிலாக மாறியது  . மேலும், "ராஜாதிராஜனுக்கு அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ராஜேந்திரனும் தன் தந்தையான ராஜேந்திரன், தாயைப் போன்ற பரவை ஆகிய இருவருக்கும் திருமேனிகள் செய்து பரவை ஈஸ்வரமுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளான்”   அவனுக்கு பின் வந்த அவனது சந்ததிகளும் இருவருக்கும் பிறந்த நாள் விழாக்கள் எடுத்து கொண்டாடினர்.

 "உண்மையான உறவினை வெளிப்படுத்தும் காதல் காலத்தை வென்று  போற்றப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணம்”  தனது அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் மதுரை-திண்டுக்கல் செல்லும் சாலையில் பரவை நங்கைநல்லூர் என்ற ஊரை நிர்மாணித்தான். தற்போது அந்த ஊர் தான் பரவை என அழைக்கப்படுகிறது.

உண்மையான அன்பே காதல்.  திருமணத்தில் முடிந்தால் மட்டுமே காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை. ஒருவர் நம் மீது அல்லது நாம் அவர் மீது வைக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருந்தால் அதுவே உண்மையான காதல். இளமையில் மட்டும் தான் காதல்  என்பதல்ல .  வயதானாலும் உண்மையான அன்பு எப்போதும் காதலாக மலர்ந்து கொண்டே இருக்கும்.  காலம் உள்ள வரை காதலும் உயிர்ப்புடன் வாழும். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!