நோட் பண்ணிக்கோங்க... நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்!

 
மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இயங்கி வரும் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை - வடபழனி வழித்தடத்தில் இரயில் சேவையின் தொடக்க நேரம் பயணிகளின் கோரிக்கையை ஏற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.நேர மாற்ற விவரங்கள்:

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2, வழித்தடம் 4-இல் (மஞ்சள் வழித்தடம்), பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 15 கி.மீ. தொலைவிலான 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களில் கடந்த அக்டோபர் 11, 2026 அன்று பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.   

ட்ரெண்ட்

பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், வரும் அக்டோபர் 23, 2026 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6:00 மணி முதலே இரயில் சேவைகள் தொடங்கும் என மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய கால அட்டவணை:இயக்க நேரப்படி இரு திசைகளிலும் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இரயில்கள் வழக்கமாக இயக்கப்படும். பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களில் இருந்தும் கடைசி இரயில் இரவு 9:00 மணிக்கு புறப்படும்.அதிகாலை வேளையில் வடபழனி மற்றும் பூவிருந்தவல்லி நோக்கிப் பயணிப்போருக்கு இந்தப் புதிய நேர மாற்றம் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றும், பயணிகள் இதற்கேற்பத் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.