கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - நோட் பண்ணிக்கோங்க!
கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபர்பூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாகச் செல்வதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
ரயில் எண் 06085: எர்ணாகுளம் - முசாபர்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 10, 17, 24 (வெள்ளிக்கிழமை) எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்படும். திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு முசாபர்பூரை சென்றடையும்.

ரயில் எண் 06086: முசாபர்பூர் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஏப்ரல் 13, 20, 27 (திங்கட்கிழமை) முசாபர்பூரில் இருந்து திங்கட்கிழமை இரவு 9.15 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும்.
இந்த ரயில்கள் தமிழகத்தில் கோயம்புத்தூர் சந்திப்பு (இரவு 02:27 - 02:30), திருப்பூர் (அதிகாலை 03:13 - 03:15), ஈரோடு சந்திப்பு (அதிகாலை 04:05 - 04:15), சேலம் சந்திப்பு (காலை 05:07 - 05:10), ஜோலார்பேட்டை, காட்பாடி சந்திப்பு, பெரம்பூர் (சென்னை) ஆக்ஜிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், இந்த ரயில் பாலக்காடு, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் மற்றும் பாட்னா வழியாக இயக்கப்படுகிறது. நீண்ட தூரப் பயணம் என்பதால், இதில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில்வே இணையதளம் அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
