வேர்ல்டு லெவலில் ட்ரெண்ட் ஆன தமன்னா.. ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய அம்பாசிடர்..!!

 
தமன்னா
ஜப்பான் அழகு நிலையத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு , ஹிந்தி சினிமாக்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார், தமன்னா. லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்னும் படம் மூலம் இந்தியிலும் பிரபலமானார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா என்னும் பாடலுக்கு தமன்னா ஆடிய பாடல் உலக அளவில் வைரலானது. இந்நிலையில் தற்போது அவர் ஜப்பானின் ஷிசேடோ என்னும் அழகுசாதன நிறுவனத்தின் முதல் இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தமன்னா கூறுகையில், ' ஒரு அதிகாரப்பூர்வமான விசயத்தைப் பகிர்கிறேன். இந்தியாவில் ஷிசேடோ(shiseido) இன் முதல் பிராண்ட் தூதராக இருப்பதில் பெருமை அடைகிறேன். 

உங்கள் அனைவருக்கும் தெளிவான பளபளப்பான தோலைப் பெற நான் ஷிசேடோவினை பரிந்துரைக்கிறேன். ஷிசேடோவின் ஸ்கின்கேரில் இருக்கும் எடெர்மைன் ஆக்டிவேட்டிங் எஸ்ஸன்ஸ், அல்டிமேட் சீரம், எனர்ஜி கிரீம் ஆகிய மூலக்கூறுகள் என் தோலின் பாரமரிப்பினை மாற்றியமைத்துள்ளது. புதுமை, தரம் மற்றும் தனித்துவத்தைக் கொண்டாடுவதில் ஷிசேடோவின் அர்ப்பணிப்பு தனிப்பட்ட அளவில் என்னிடம் பிரதிபலிக்கிறது. அதனால்தான் ஷிசேடோவின் ஸ்கீன் கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். 

Japan's largest cosmetics firm Shiseido bets on India growth with first  launch in a decade - The Economic Times

மேலும் அவர், 'நூற்றாண்டைக் கடந்து நிற்கும் ஷிசேடாவின் நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சி’எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு, நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் காவாலயா என்னும் பாடலுக்கு தமன்னா ஆடிய நடனமும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இப்பாடல் வைரல் ஆனதால் தான் இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு முன் இந்த நிறுவனத்திற்கு மனி ஹெஸ்ட் சீரிசில் நடித்த உர்சுலா (டோக்யோ ) இருந்தது குறிப்பிடதக்கது.

From around the web