தாம்பரம் அருகே போலீசார் துப்பாக்கிச்சூடு! பிரபல ரவுடி சதாம் உசேன் சுட்டுப்பிடிப்பு
சென்னை தாம்பரம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடியை கைது செய்யச் சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அருகே சதாம் உசேன் என்ற நபர் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சதாம் உசேன் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சதாம் உசேனுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதாம் உசேன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிடிவாரண்ட் தொடர்பான விவரங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
