வார்டு உறுப்பினரின் கணவரை வெட்டிய வழக்கு: தவெக நிர்வாகி கைது செய்து சிறையில் அடைப்பு!

 
தவெக

 

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சியில் வார்டு உறுப்பினரின் கணவரை வெட்டிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளர் ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள அகரம் தென் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருப்பவர் கோமளா. இவரது கணவர் வெங்கடேசன். இவரை வெட்டியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளர் ரஞ்சித்குமார் மீது புகார் எழுந்தது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிறை கைது கைதி சிங்கப்பூர் வெளிநாட்டு சிறை ஜெயில்

விசாரணைக்குப் பின்னர் ரஞ்சித்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.வார்டு உறுப்பினரின் கணவரை வெட்டிய வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.