கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ மூலம் மாதந்தோறும் ரூ.6 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் தமிழ்பட நடிகை!

 
அபிராமி

தமிழ் சினிமாவில் 'நோட்டா' மற்றும் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றதன் மூலம் இவர் மக்களிடையே மேலும் பிரபலமடைந்தார்.

தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் 'சப்ஸ்க்ரிப்ஷன்' சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இதில் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மட்டும் பிரத்யேகமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. 

இவரது இந்தப் பிரத்யேகப் பதிவுகளைப் பார்ப்பதற்குப் பயனர் ஒருவருக்கு மாதம் 390 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை அவர் வருமானம் ஈட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.