இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழை... சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க!
Nov 26, 2026, 16:50 IST
மன்னார் வளைகுடா முதல் தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், தேனி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
