பவுர்ணமி, முகூர்த்த நாட்கள்... தமிழகம் முழுவதும் 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பவுர்ணமி, சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 2,725 சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள்
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 775 பஸ்களும், சனிக்கிழமை 485 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 95 பஸ்களும், சனிக்கிழமை 85 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிற பகுதிகளிலும் கூடுதல் வசதி
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு 23, 24-ம் தேதிகளில் தலா 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப 805 சிறப்பு பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உ
