உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், இ-பைக்: ரூ.4 கோடியில் தமிழக அரசு திட்டம்!

 
ஸ்கூட்டர்

 

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்சார வாகனம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பிறரைச் சார்ந்திருக்காமல் தங்களது அன்றாடப் பயணங்களை மேற்கொள்ள உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் போக்குவரத்து வசதியும் சுயசார்பும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.