அண்ணன் சீர்... திருமணப் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை... டெண்டர் கோரல்!

 
அண்ணன்

 

தமிழகத்தில் பெண்களின் திருமணத்தை முன்னிட்டு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் வகையில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

இந்தத் திட்டத்துக்காக தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப்புடவைகளைக் கொள்முதல் செய்ய அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் பணிகள் டெண்டர் நடைமுறைகள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

திட்டம் எப்போது தொடங்கப்படும், யாருக்கெல்லாம் இந்தப் பயன் கிடைக்கும், விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன என்பன உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டு சேலை யாருக்கெல்லாம் கிடைக்கும்? - தமிழக அரசு அறிவிப்பு| Annan Seer Scheme: Who will get 8 grams of gold and a silk saree?

ஏற்கனவே தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீராக தங்க மோதிரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த வரிசையில், திருமணப் பெண்களுக்கும் சீர்வரிசை வழங்கும் புதிய திட்டம் கவனம் பெற்றுள்ளது.