தமிழக அரசுப் பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 
பள்ளி கல்வித்துறை. பள்ளி கல்வித்துறை.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 1,625 உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்யப் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் நீண்ட நாட்களாகக் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உடற்கல்விப் பட்டதாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 1,625 புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பள்ளி மாணவர்கள்

இந்த புதிய பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த நபர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முறையான தேர்வுகள் மற்றும் விதிமுறைகளின்படி வேகத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்வு தேதிகள் டிஆர்பி மூலம் விரைவில் தனி அறிவிப்பாக வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் அனைத்தும் மிக விரைவில் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.