தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: 2 ஆண்டுகளுக்கு புதிய டெண்டர் வெளியீடு!

 
சட்டப்பேரவை விஜய் தீர்மானம்

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்புவதற்காக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இதற்காக தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு ஜனவரி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் வரை என இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது.

பல கேமராக்கள் மூலம் நேரலை

சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள், உறுப்பினர்களின் உரைகள் உள்ளிட்ட நிகழ்வுகளைப் பல கேமராக்கள் மூலம் பதிவு செய்து, தொலைக்காட்சி சேனல்களில் உடனுக்குடன் ஒளிபரப்புவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சிகளுக்குப் பிந்தைய தயாரிப்புப் பணிகளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை - முதல்வர் அறை மாற்றம்; நந்தன் கால்வாய் திட்டம் குறித்து காரசார விவாதம்

இதற்கான டெண்டர் நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்கலாம். அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு டெண்டர் திறக்கப்பட உள்ளது.சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக மக்களைச் சென்றடையும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது