இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - 3 முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம்!

 
சட்டப்பேரவை விஜய் தீர்மானம்

வார இறுதி இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது.

நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய 3 முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று விரிவாக நடைபெற உள்ளன.

சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

விவாதங்களின் முடிவில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசவுள்ளனர். முக்கியத் துறைகளின் அறிவிப்புகள் மற்றும் பதிலுரைகள் இடம்பெறவுள்ளதால் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.