தமிழகத்தில் சிறப்பு வகுப்புகளுக்குத் தடை - செப்.26 முதல் காலாண்டு விடுமுறை!

 
குஷியில் மாணவர்கள் தேர்வு நிறைவு விடுமுறை பொத்தேர்வு

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனத் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 26 ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பள்ளி மாணவர்கள்

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், விடுமுறை நாட்களில் அவர்கள் ஓய்வெடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும், விடுமுறை காலத்தில் பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளுக்கு மாறாக விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்குக் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனத் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.