தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
கடவுள் முருகனை இழிவுபடுத்திப் பேசிய தமிழக வெற்றிக் கழக ஆதரவாளரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைமைக்கும் அரசுக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனமும் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளார்.
முருகக்கடவுளை இழிவுபடுத்திய நபர் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும், இதுவரை அவரைப் போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆதரவாளர் என்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், பாஜக தொண்டர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக பாஜக சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இறை நம்பிக்கையையும் இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சணியமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
