தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

 
சட்டப்பேரவை

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன் குறித்து முதல்வர் அலுவலகம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் அமைச்சரவையில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகத்தில் பின்தங்கியிருப்பவர்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது அல்லது சிலருக்குக் கூடுதல் பொறுப்புகளை வழங்குவது குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில குறிப்பிட்ட துறைகளின் செயல்பாடுகளில் திருப்தியற்ற தன்மையின் காரணமாக இலாகா மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.