தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர் விஜய்!

 
தீபாவளி போனஸ்

தமிழ்நாட்டின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-26ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதம் வரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 2,60,497 தொழிலாளர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவர். இதற்காக மாநில அரசு சார்பில் மொத்தம் ரூ.367.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை பெறுவார்கள்.

தீபாவளி

லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஆவின் நிறுவனங்களில் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும்.

உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியப் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% வழங்கப்படும்.

தீபாவளி போனஸ்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியமும், நுகர்பொருள் வாணிபக் கழகத் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையும் வழங்கப்படும்.

கூட்டுறவு அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தனி அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த போனஸ் அறிவிப்பு பொதுத்துறைப் பணியாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.