கிருஷ்ண ஜெயந்தி: தமிழக முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் முதல்வர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அநீதிக்கு எதிரான அறம் வெல்லும் என்றும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.


தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி, அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.