‘விஜயவாடா உற்சவம்’ விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு நேரில் அழைப்பு!
Oct 7, 2026, 08:10 IST
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதலமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வரும் அக்டோபர் 11 முதல் 20 வரை 'விஜயவாடா உற்சவம் 2.0' மற்றும் தசரா நவராத்திரிப் பெருவிழா ஆகியவை மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளன. இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு தலைமையில், எம்பிக்கள் கேசினேனி சிவநாத், முகுந்தா சீனிவாசுலு மற்றும் ஹரிஷ் பாலயோகி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்த முறையான அழைப்பிதவலை வழங்கினர்.
