தமிழகத்திற்காக பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைத்த 12 முக்கியக் கோரிக்கைகள் - முழு விவரம்!

 
மோடி விஜய் விஜய்மோடி

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக மொத்தம் 12 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை விரைந்து நிறைவேற்றும்படி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளுக்கு விரைவில் மத்திய அரசின் ஒப்புதலை வழங்க வேண்டும்.

கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஓசூரிலிருந்து கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

மோடிவிஜய் விஜய்மோடி

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.5,110 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியினை வழக்காடு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை - கன்னியாகுமரி மற்றும் சென்னை - கோவை இடையே அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க வேண்டும்.

செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையை முன்னுரிமை அடிப்படையில் 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

விஜய் மோடி  விஜய்மோடி

திருச்சி பஞ்சப்பூர் - ஜெயபுரம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கரூர் முதல் கோவை வரையிலான சாலையை ஆறு வழிச்சாலையாகத் தரமுயர்த்த வேண்டும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாதவரம் - சோழவரம் இடையே புதிய உயர்மட்டச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார மற்றும் போக்குவரத்து வளர்ச்சியைத் துரிதப்படுத்தக் கோரிய இதர முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்.