முதலமைச்சர் விஜய் - ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சந்திப்பு - தமிழக அமைச்சரவையில் மாற்றத்திற்கு வாய்ப்பு!

 
விஜய் ஆளுநர்

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது மாநிலத்தின் பொதுவான நலம் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுவதோடு, தமிழக அமைச்சரவையில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ஆளுநர் அர்லேகர்

கடந்த மார்ச் மாதம் ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதலாகக் கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களாக முழுநேர ஆளுநர் இல்லாத நிலை நீடித்து வந்த சூழலில், குடியரசுத் தலைவர் திரெபதி முர்முவின் உத்தரவுப்படி அவர் தமிழ்நாட்டின் நிரந்தர முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உற்ச வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து ராஜ்பவனத்தில் நடைபெற்ற எளிய விழாவில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ஏற்கனவே தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

ஆளூநர்விஜய் ஆளுநர்

இந்நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய், அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது மரியாதை நிமித்தான வாழ்த்துகளுடன் சேர்த்து, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சில அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது அல்லது புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிப்பது போன்ற அதிரடியான அமைச்சரவை மாற்றங்கள் குறித்தும் ஆளுநருடன் அவர் கலந்தாலோசிக்கக் கூடும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் நிர்வாக ரீதியான சீரமைப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.