இன்று தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.

வரவிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், தொகுதி எண்ணிக்கை மற்றும் மாநில உரிமைகளுக்கு ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் எம்.பி.க்களிடம் கேட்டறிகிறார்.

முதல்வர் விஜய்

இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதில் தங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்றும், ஆனால் இக்கூட்டத்திற்கு முன்பாக மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.