தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

 
விநாயகர் பிள்ளையார் கணபதி

விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி திருநாளில் தொடங்கப்படும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் வளமும் பெருக வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் நல்லெண்ணங்கள் ஈடேறி, அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாகப் பயணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் வாழ்த்தியுள்ளார்.