தமிழகத்தில் ரூ.33,066 கோடியில் 196 புதிய துணை மின்நிலையங்கள் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

 
சட்டப்பேரவை விஜய் தீர்மானம்

தமிழகத்தில் மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.33,066 கோடி மதிப்பில் புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் மின்பாதைகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடையில்லா சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு 196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் புதிய மின்பாதைகள் அமைக்கப்படுவதோடு, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்பாதைகளும் பலப்படுத்தப்படவுள்ளன. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.33,066 கோடியாகும்.

மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் வகையில், தூத்துக்குடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய சூப்பர்கிரிட்டிகல் வெப்ப மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன், மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட இந்த புதிய மின் நிலையம் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.