சினிமா டிக்கெட் ரூ.250 ஆக உயருமா? முதலமைச்சர் விஜயிடம் திரையரங்கு உரிமையாளர்கள் 9 கோரிக்கைகள்!
தமிழகத்தில் திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு திரைப்பட எக்ஸிபிட்டர்ஸ் சங்கம் சார்பில் முதலமைச்சர் விஜயிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகபட்சமாக ரூ.150 ஆக உள்ள சினிமா டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இடம்பெற்றுள்ளது. அதேபோல், திரையரங்குகளில் வசூலிக்கப்படும் பராமரிப்புக் கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திரையரங்குகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும், டிக்கெட் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கோரிக்கைகள் மீது தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
