தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

 
மின் நிர்மல்குமார்

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி ஆகிய 6 முக்கிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 அல்லது 5:00 மணி வரை. துணை மின்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் அவசியமான மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள். குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் சார்ந்த அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.