முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விரும்பிய பணியை பெற புதிய இணையதள வசதி அறிமுகம்!

 
விஜய்

 

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முப்படை வீரர்கள் தங்களுக்குப் பிடித்தமான பணியைத் தேர்வு செய்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார், இந்த மேம்படுத்தப்பட்ட இணையதள செயலியை நவம்பர் 6-ம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

என்னென்ன வசதிகள் உள்ளன?

தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் கடந்த 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒப்பந்த அடிப்படையில் மறுவேலைவாய்ப்பு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதுவரை இக்கழகத்தின் மூலம் 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். தற்போது 2,207 திட்டங்களில் 9,786 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.19 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய இணையதளத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்களது ராணுவப் பணிக்கான ஆவணங்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் திறன்களைப் பதிவேற்றலாம். தங்களது விருப்பத்திற்கேற்ற பணிகளுக்கு விண்ணப்பித்து இணையவழியில் வேலைவாய்ப்பைப் பெறவும் முடியும்.

நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான பணியாளர்களின் கல்வித்தகுதி, வயது, திறன், பணியிடம், வேலை நேரம் மற்றும் சம்பள விவரங்களைப் பதிவிட்டு ஆட்களைத் தேர்வு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.